போக்குவரத்துக்கு இடையூறாக மாடுகள்
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் ஏராளமான மாடுகள் சுற்றித்திரிவது அதிகரித்து வருகிறது. இதனால் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளுகளும் ஏற்படுகிறது. கிரீன் சர்க்கிள் பகுதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாகச் சுற்றித்திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.
-குமரன், வேலூர்.
வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்
பாலாற்றில் மழைவெள்ளம் ஓடுகிறது. பாலாறை ஒட்டி உள்ள கிராமங்களிலும், நகரங்களிலும் ஏராளமான மக்கள் வசிக்கின்றனர். அவர்கள் விபரீதங்களை அறியாமல் துணிகளை துவைப்பது, பாலாற்றில் குளிப்பது போன்ற செயல்களை மேற்கொள்கிறார்கள். இதனால் அசம்பாவித சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது. எனவே பாலாற்றை ஒட்டி உள்ள குடியிருப்பு, மக்கள் நடமாடும் பாலங்களின் அருகில் இலவச தொலைப்பேசி எண்ணுடன் காவல் துறை சார்பில் வெள்ள அபாய எச்சரிக்கை பலகை வைக்க வேண்டும்.
-வேங்கடவன், வேலூர்.
சாலையை சீர் செய்வார்களா?
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ஒன்றியம் சந்திரபுரம் ஊராட்சியில் கொல்லங்குட்டை கிராமம் உள்ளது. இந்த கிராமத்துக்குச் செல்லும் சாலையை சீர் செய்ய ஆரம்பக்கட்டப்பணிகள் தொடங்கிய நிலையில் தொடர்ந்து எந்த பணிகளும் மேற்கொள்ளப்படில்லை. 2 மாதங்கள் ஆகியும் இன்னும் பணியை தொடங்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். தற்போது மழை பெய்து வருகிறது. அந்த வழியாக சென்று வர சிரமமாக உள்ளது. சாலையை அதிகாரிகள் சீர் செய்வார்களா?
-மணி, கொல்லங்குட்டை.
சாலையில் வழிந்தோடும் கழிவுநீர்
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி தாலுகா மேலேரி கிராமத்தில் உஅதிகாரிகள் ள்ள யாதவர் தெரு, குளக்கரைதெரு மற்றும் சித்தேரி ஏரிக்கு செல்லும் சாலையில் உள்ள கடைசி தெரு ஆகிய தெருக்களில் சாலை மோசமாக உள்ளது. மழைக்காலத்தில் கழிவுநீர் கால்வாயில் ஓடும் சாக்கடை நீரும், மழைநீரும் சேர்ந்து சாலையில் வழிந்தோடுகிறது. சாலையை சற்று உயர்த்தி சிமெண்டு சாலையாக போட வேண்டும்.
-வக்கீல் செ.பழனி, நெமிலி.
பக்க கால்வாய் வசதி தேவை
ஆரணி நகராட்சி சைதாப்பேட்டை கஸ்தூரிபாய் நகர் விரிவாக்கப்பகுதியில் பக்க கால்வாய்கள் இல்லாததால் சமீப காலமாக பெய்து வரும் மழைநீர் ஓட வழியில்லாமல், சாலை அருகில் உள்ள காலியிடங்களில் தேங்கி குளம் காட்சியளிக்கிறது. அதில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயமும் ஏற்படுகிறது. தேங்கி நிற்கும் மழைநீர் வடிய நகராட்சி நிர்வாகம் பக்க கால்வாய் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ராகவேந்திரா, ஆரணி.
சிமெண்டு சாலை அமைப்பார்களா?
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஒன்றியம் 34:மாமண்டூர் கிராமம் 4-வது வார்டு அம்பேத்கர் தெருவில் மழைநீர் ஆங்காங்ேக தேங்கி குட்டை குட்டையாக காட்சியளிக்கிறது. சாலையில் சிறுவர்கள், முதியவர்கள் நடந்து செல்ல முடியவில்லை வழுக்கி கீேழ விழுந்து விடுகிறார்கள். அம்பேத்கர் தெருவில் சிமெண்டு சாலை அமைத்துத் தர அதிகாரிகளிடம் வலியுறுத்தியும் நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சிமெண்டு சாலை அமைப்பார்களா?
-சுந்தரமூர்த்தி, மாமண்டூர்.