பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்தவர் கைது

ராமநாதபுரத்தில் பெண்கள் குளிப்பதை செல்போனில் படம் எடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-17 17:18 GMT
ராமநாதபுரம், 

ராமநாதபுரம் அம்பலகாரத்தெரு பகுதியை சேர்ந்தவர் அபுதாகிர் என்பவரின் மகன் பரக்கத்துல்லா (வயது 47). இவர் பட்டரைகார தெரு பகுதியில் குளிக்கும் பெண்களை மாடியில் இருந்து தனது செல்போனில் ஆபாசமாக வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து அப்பகுதியை சேர்ந்த 45 வயது பெண் ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பரக்கத்துல்லாவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்