சூதாடிய 21 பேர் கைது

ஊத்துக்குளி அருகே பணம் வைத்து சூதாடிய வடமாநில தொழிலாளர்கள் 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரத்து 150 பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-17 16:01 GMT
ஊத்துக்குளி, அக்.18-
ஊத்துக்குளி அருகே பணம் வைத்து சூதாடிய வடமாநில தொழிலாளர்கள் 21 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.70 ஆயிரத்து  150 பறிமுதல் செய்யப்பட்டது.
சூதாட்டம்
இதுகுறித்து ஊத்துக்குளி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது
 ஊத்துக்குளி அருகே உள்ள முதலிபாளையம் செம்மாண்டம்பாளையம், அய்யன்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக ஊத்துக்குளி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து ஊத்துக்குளி இன்ஸ்பெக்டர் மகேந்திரன் தலைமையில் போலீசார் அப்பகுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர்.
 21 பேர் கைது
 அப்போது அங்கு 21 பேர் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் வடமாநில தொழிலாளர்கள். இதையடுத்து அவர்கள்  21 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து பணம் ரூ.70 ஆயிரத்து 150 பறிமுதல்  செய்யப்பட்டது. 
--------------

-

மேலும் செய்திகள்