மேலும் 8 பேருக்கு கொரோனா

திண்டுக்கல் மாவட்டத்தில் மேலும் 8 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர்.

Update: 2021-10-17 15:16 GMT
திண்டுக்கல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் 2 பெண்கள் உள்பட மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று கண்டறியப்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 980 ஆனது. அதேநேரம் 12 பேர் தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதையடுத்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 32 ஆயிரத்து 222 ஆக அதிகரித்தது. நேற்றைய நிலவரப்படி 116 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மேலும் செய்திகள்