ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
ரேக்ளா பந்தயத்தில் சீறிப்பாய்ந்த காளைகள்
காங்கேயம்
ஊதியூரை அடுத்துள்ள கவுண்டம்பாளையத்தில் நேற்று ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. ஊர்பொதுமக்கள் சார்பில் நடைபெற்ற பந்தயத்தில் 200 மீட்டர், 300 மீட்டர் ஆகிய பிரிவுகளில் 200க்கும் மேற்பட்ட வண்டிகளுடன் காளைகள் பங்கேற்றன. இந்த போட்டிகளை அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் காங்கேயம், குண்டடம், தாராபுரம், பொள்ளாச்சி, திருப்பூர், உடுமலை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 200க்கும் மேற்பட்ட வண்டிகள் கலந்து கொண்டன. வெற்றிபெற்ற ரேக்ளா காளைகளின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள், பரிசுகள் வழங்கப்பட்டன. போட்டிக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை ஊதியூர் போலீசார் செய்திருந்தனர்.