வெள்ளகோவில்,
வெள்ளகோவிலில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கொள்முதல் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் நிலையத்திற்கு வெள்ளகோவில் சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். அதன்படி நேற்று 30 விவசாயிகள் 5 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் முத்தூர், மூலனூர், காங்கேயம் பகுதிகளைச் சேர்ந்த 8 வியாபாரிகள் கலந்து கொண்டு ஒரு கிலோ செடி முருங்கை ரூ.40க்கும், மர முருங்கை ரூ.30க்கும், கரும்பு முருங்கை ரூ.50க்கும், கொள்முதல் செய்தனர்.