புகார் பெட்டி

புகார் பெட்டி

Update: 2021-10-16 22:10 GMT
சேதமான பாலம்
மதுரை தெற்குவாசல் பாலத்தின் நடுவே பள்ளங்கள் வரிசையாக காணப்படுகிறது. இதன் காரணமாக இந்த வழியாக ெசல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகிறது. எனவே இந்த சாலையை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன், தெற்குவாசல்.
உடைந்த மின்கம்பம் 
விருதுநகர் மாவட்டம் இனாம்ரெட்டியபட்டி அரசு பள்ளி அருகே மின்கம்பம் ஒன்று உள்ளது. இந்த மின்கம்பம் அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் தற்போது அது உடைந்த நிலையில் காணப்படுகிறது. பள்ளி குழந்தைகள் அந்த வழியாக தான் நடந்து சென்று வருகிறார்கள். எனவே எந்தவித அசம்பாவித சம்பவமும் நடைபெறும் முன்பு, மின்வாரிய அதிகாரிகள் மின்கம்பத்தை சரி செய்ய வேண்டும்.
பரத்ராஜா, விருதுநகர்.
வேகத்தடை வேண்டும்  
மதுரை மாவட்டம் திருமங்கலம் அசோக் நகர் பகுதியில், சர்ச் எதிர் புறம் நான்கு ரோடு சந்திப்பு வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இப்பகுதியில் வேகத்தடை இல்லாததன் காரணமாக அடிக்கடி விபத்துகள் தொடர்ந்து நடக்கிறது. இதனால் இப்பகுதியில் வேகத்தடை அமைக்கப்படுமா? 
ஆனந்த், திருமங்கலம். 
சாலை ேதவை 
சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் அருள்நகர் கிராமத்தில் 70-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு சாலை வசதி இல்லாத காரணத்தால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மழை காலங்களில் சாலை சேறும், சகதியுமாக மாறிவிடுவதால் நடந்து கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. பொதுமக்களின் நலன்கருதி இங்கு சாலை அமைப்பார்களா?
பொதுமக்கள், காளையார்கோவில். 
பயன்பாட்டிற்கு வருமா? 
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மெயின்ரோட்டில் உள்ள மகளிர் போலீஸ் நிலையம் அருகே உயர்கோபுர மின்விளக்கு அமைக்கப்பட்டது. ஆனால் இதுநாள்வரை இந்த உயர்கோபுர மின்விளக்கு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படவில்லை. இதனால் அது பழுதாகும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உயர்கோபுர மின்விளக்கை பயன்பாட்டிற்கு கொண்டு வர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு்ம். 
குமார், சாத்தூர்.  
குண்டும், குழியுமான சாலை  
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே காசிலிங்காபுரம் மேற்கு கார்ப்பரேஷன் தெருவில் சாலை மிகவும் மோசமான நிலையில் குண்டும், குழியுமாக உள்ளது. இந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இரவு நேரத்தில் பள்ளம், ேமடு இருப்பது தெரியாமல் விபத்தில் சிக்குகின்றனர். வாகன ஓட்டிகளின் நலன்கருதி இந்த சாலையை சீரமைப்பார்களா? 
சேகர், தேவகோட்ைட. 
தேங்கி நிற்கும் மழைநீர் 
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி பாப்பா ஊரணி 34-வது வார்டு பகுதியில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழையால் வீடுகளின் முன்பு ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். தேங்கி நிற்கும் மழைநீரில் இருந்து கொசுக்களும் அதிகமாக உற்பத்தியாகிறது. எனவே, தேங்கி நிற்கும் மழைநீரை அகற்றிட நகராட்சி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? 
-சேகர், காரைக்குடி. 

மேலும் செய்திகள்