சாரல் மழையால் பட்டாசு உற்பத்தி பாதிப்பு

வெம்பக்கோட்டை பகுதியில் சாரல் மழையினால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-16 20:05 GMT
தாயில்பட்டி, 
வெம்பக்கோட்டை பகுதியில் சாரல் மழையினால் பட்டாசு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. 
பட்டாசு ஆலை 
வெம்பக்ேகாட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் எண்ணற்ற பட்டாசு ஆலைகள் உள்ளது. இந்த ஆலைகளில் தற்போது தீபாவளியையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
இந்தநிலையில் வெம்பக்கோட்டை ஒன்றியத்தை சேர்ந்த மீனாட்சிபுரம், துரைசாமிபுரம், தாயில்பட்டி, கணஞ்சாம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியம் 1 மணி முதல் சாரல் மழை பெய்ய தொடங்கியது. 
சாரல் மழை 
அவ்வப்போது பெய்த சாரல் மழையினால் வெயில் அடிக்காமல் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இதனால் பட்டாசு உற்பத்தி நிறுத்தப்பட்டது. 
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:- 
வெம்பக்கோட்டை பகுதியில் தற்போது தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. கடந்த 2 வாரங்களுக்கு மேலாக நல்ல வெயில் அடித்ததால் பட்டாசுகள் தயாரிக்கப்பட்டு வெளியூர்களுக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வந்தது.
 இந்தநிலையில் நேற்று சாரல்மழை பெய்ததால் பட்டாசு உற்பத்தி தயாரிக்கும் பணி மதியத்திற்கு மேல் தடைபட்டது. ஆதலால் தொழிலாளர்கள் மதியத்திற்கு மேல் வீட்டிற்கு திரும்ப அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.  இவ்வாறு அவர்கள் கூறினர். 

மேலும் செய்திகள்