பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
நெல்லை:
புரட்டாசி கடைசி சனிக்கிழமையை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் பக்தர்கள் வழிபாடு நடத்தினர்.
புரட்டாசி கடைசி சனிக்கிழமை
புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் பெருமாளை வழிபட உகந்த நாளாக கருதப்படுகிறது. இதையொட்டி புரட்டாசி சனிக்கிழமைகளில் பெருமாள் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். ஆனால் தற்போது கொரோனா காலத்தையொட்டி கோவில்களில் 3 நாட்களுக்கு வழிபாட்டுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் முதல் கோவில்களில் அனைத்து நாட்களும் வழிபாட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையொட்டி புரட்டாசி மாதம் கடைசி சனிக்கிழமையான நேற்று திருவேங்கடநாதபுரம் வெங்கடாசலபதி கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் காலை முதலே கூட்டம் அதிகமாக இருந்தது. நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் கோவில் வளாகத்தில் கருட வாகனத்தில் எழுந்தருளி இருந்த சுவாமியை வழிபட்டனர்.