பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் மணல் கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது

பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் மணல் கடத்திய சிறுவன் உள்பட 2 பேர் கைது

Update: 2021-10-16 16:56 GMT
பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் அருகே பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்றில் இருந்து சிலர் அனுமதி இன்றி மணலை மூட்டைகளாக கட்டி மொபட்டில் கடத்தி செல்வதாக ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் பிலிக்கல்பாளையம் காவிரி ஆற்று பகுதிக்கு சென்று கண்காணித்தனர். அப்போது அங்கு அனுமதியின்றி மணல் கடத்திய பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூரை சேர்ந்த குமார் மகன் பிரவீன் (வயது 23), மற்றும் 16 வயது சிறுவன் என 2 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மொபட்டு பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
=======

மேலும் செய்திகள்