ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட டிரைவர் பிணமாக மீட்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட டிரைவர் பிணமாக மீட்கப்பட்டார்.

Update: 2021-10-16 16:02 GMT
பென்னாகரம்:
திருவள்ளுவர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள திருநின்றவூரை சேர்ந்தவர் தமிழரசன் (வயது 24). டிரைவர். இவர் நேற்று முன்தினம் நண்பர்களுடன் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா வந்தார். இவர்கள் ஆலம்பாடி காவிரி ஆற்றில் குளித்தபோது தமிழரசன் திடீரென தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஒகேனக்கல் போலீசார் மற்றும் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தமிழரசன் தேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்  ஒகேனக்கல்லில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜெம்பருத்திபட்டி என்ற இடத்தில் தமிழரசன் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்