பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது

மதுரையில் பெண்ணை மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-15 20:34 GMT
மதுரை, 

மதுரை புதூர் ஜவகர்புரம் பகுதியை சேர்ந்தவர் வள்ளி (வயது 39). சில ஆண்டுகளுக்கு முன்பு இவரது குடும்பத்தினர் அதே பகுதியை சேர்ந்த பாலா என்பவர் மீது வழக்கு ெதாடர்ந்தனர். அதன் பேரில் போலீசார் பாலாவை கைது செய்தனர். அதை தொடர்நது வள்ளி குடும்பத்தினருக்கும், பாலா சகோதரர் முத்து குடும்பத்திற்கும் இடையே முன்விரோதம் இருந்தது. சம்பவத்தன்று வள்ளி வீட்டிற்கு முத்து (29) வந்தார். அங்கு அவரை தரக்குறைவாக பேசி மிரட்டல் விடுத்தார். இது குறித்த புகாரின் பேரில் தல்லாகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துவை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்