தினத்தந்தி புகார் பெட்டி

'தினத்தந்தி' புகார் பெட்டிக்கு 89398 18888 என்ற 'வாட்ஸ்-அப்' எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகள் வருமாறு:-

Update: 2021-10-15 19:54 GMT
கரூர்
மயானங்கள் சீரமைக்கப்படுமா? 
திருச்சி மாவட்டம் திருவெள்ளறை பஞ்சாயத்திற்கு உட்பட்ட அனைத்து மயானங்களும், முள்காடுகளாக காட்சி அளிக்கிறது. மேலும் தண்ணீர், பாதை வசதி இல்லாததால் சடலத்தை புதைக்கவோ அல்லது தகனம் செய்யவோ கொண்டுசெல்லும் உறவினர்கள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
கோ.ரங்கராஜன், திருவெள்ளறை, திருச்சி. 

அடிப்படை வசதி இன்றி தவிக்கும் மக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், கோபாலப்பட்டிணம் அவுலியாநகர் 4ம் வீதியில் கழிவுநீர் செல்ல கால்வாய் வசதி, சாலை வசதி இல்லை. இதனால் மழை பெய்யும்போது கழிவுநீர் சாலையில் செல்வதும், சாலை சேறும், சகதியுமாக காட்சி அளிப்பதுமாக உள்ளது. மேலும் இதில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி  இப்பகுதியில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சபியுல்லா,  அவுலியாநகர், புதுக்கோட்டை. 

சேறும், சகதியுமான சாலை 
அரியலூர் மாவட்டம், எருத்துகாரன்பட்டி ஊராட்சி ராமலிங்க நகர் முதல் தெருவில் உள்ள சாலை சேறும், சகதியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் சைக்கிள், மோட்டார் சைக்கிள், நடந்து செல்லும் பெண்கள், முதியவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இப்பகுதியில் கழிவுநீர் செல்ல வடிகால் வசதி இல்லை. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், ராமலிங்கநகர், அரியலூர். 

தெருவிளக்கு எரியவில்லை
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் ஒன்றியம் நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் கிராமத்தில் ஆலமரம் பகுதியில் இருந்து தோப்பு செல்லும் சாலையில் ஒன்றரை மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. மேலும் அந்த பகுதியில் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அந்த வழியாக செல்லும் பலர் கீழே விழுந்து பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெருவிளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.           
முகமது யூசுப், கோபாலப்பட்டிணம், புதுக்கோட்டை.

சாக்கடையில் அடைப்பு 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தாலுகா, நவல்பட்டு ஊராட்சி அண்ணா நகர் 120 அடி சாலையின் வடக்கு, TNUDP பேஸ்-2 குடியிருப்பு பகுதியில் பாதாளச் சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவு நீரானது குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கிறது. சாலையிலும் நிரம்பி ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் அப்பகுதியில்  துர்நாற்றம் வீசுவதுடன்  அப்பகுதியில் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
ராஜன், நவல்பட்டு அண்ணா நகர், திருச்சி. 

மின் இணைப்பை சரிசெய்ய வேண்டும்
அரியலூர் மாவட்டம் செந்துறை மின்பகிர்மான பகுதியைச் சார்ந்த மருதூர் கிராமத்தில்  இயங்கி வரும் அரசு மாணவர் விடுதிக்குச் செல்லும் மின்னிணைப்பு கம்பியானது மூன்று முறைக்கு மேல் அறுந்து விழுந்த நிலையில் அதனை மீண்டும் இணைத்து தற்காலிகமாக மின் இணைப்பு கொடுத்துள்ளனர். இதன் வழியாக அடிக்கடி மக்கள் சென்று வருகின்றனர். இது மும்முனை இணைப்பு என்பதால் அவ்வழியே சென்று வரும்  பொதுமக்களுக்கு அதிக ஆபத்தை  ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது. விபத்து ஏற்படும் முன் இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், மருதூர், அரியலூர். 

நாய்கள் தொல்லை அதிகரிப்பு 
பெரம்பலூர் பழைய பஸ் நிலையத்தில் நாய்கள் அதிக அளவில் காணப்படுகின்றன. இவை திடீரென சாலையை கடப்பதால் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைகின்றனர். மேலும் இந்த நாய்கள் அவ்வழியே செல்பவர்களை கடிக்க வருவதால் பொதுமக்கள், பயணிகள் பெரிதும் அச்சத்துடனே அப்பகுதியை கடந்து செல்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
விஜயராஜ், பெரம்பலூர். 

பயனற்ற நீர்த்தேக்க தொட்டி
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம் சிருகளத்தூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்க தொட்டி பராமரிப்பு இன்றி பழுதடைந்து பயனற்று கிடக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
இளையராஜா, சிறுகளத்தூர், அரியலூர். 

நிறம்பி வழியும் குப்பை தொட்டிகள்
கரூர் மாவட்டம், சின்னாண்டாங்கோவில் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகள் நிறம்பி அப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது.  மேலும் இந்த குப்பை தொட்டிகளில் கொட்டப்படும் குப்பைகள் காற்றில் பறந்து அப்பகுதி முழுவதும் குப்பைகளாக மாறி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
கணேஷ், சின்னாண்டாங்கோவில், கரூர். 

எரியாத மின் விளக்குகள் 
திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட 61 வது வார்டு தெற்கு காட்டூர் கமலாநேரு நகர் 3 வது தெருவில் கடந்த 5 மாதங்களாக தெருவிளக்கு எரியவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் இரவு நேரத்தில் செல்ல பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இருளை பயன்படுத்தி  சட்ட விரோத செயல்கள் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சரவணன்,  தெற்கு காட்டூர், திருச்சி. 

குண்டும், குழியுமான தார் சாலை 
திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை நெ.1 டோல்கேட்டை அடுத்த தாளக்குடி பகுதியில் தார் சாலை குண்டும், குழியுமாக உள்ளதால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் மோட்டார் சைக்கிளில் செல்பவர்கள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
டேனியல், திருச்சி. 

சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகள் 
திருச்சி பொன்நகர், செல்வநகர், கலெக்டர் அலுவலக ரோடு போன்ற பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளும், பசுமாடுகளும், குதிரைகளும் சுற்றித்திரிகின்றன. ஜல்லிக்கட்டு காளைகள் சாலையின் நடுவே நிற்பதால் நடந்து செல்பவர்களும், மோட்டார் சைக்கிளில் செல்பவர்களும் எங்கு தங்களை முட்டிவிடுமோ என்ற அச்சத்துடனேயே சென்று வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
மார்டின், செல்வநகர், திருச்சி.

வடிகால் வசதி ஏற்படுத்தப்படுமா? 
திருச்சி மாவட்டம், புதிய செல்வநகர், பாரதியார் 5 குறுக்கு தெரு  கிழக்கு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் முறையான வடிகால் வாய்க்கால் இல்லாததால் மழை பெய்யும்போது மழைநீர் செல்ல வழியின்றி தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
பொதுமக்கள், புதிய செல்வநகர், திருச்சி. 

முறிந்து விழும் நிலையில் மின்கம்பம் 
திருச்சி மாநகராட்சி 62 வது வார்டில் இருக்கும் பாரதிதாசன் நகர் 5 வது தெருவில்  அமைக்கப்பட்டுள்ள மின்கம்பம் பழுதடைந்து சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கம்பிகள் வெளியே தெரிகின்றன. பொதுமக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் இந்த மின்கம்பம் உள்ளதால் எப்போது வேண்டுமானாலும் இந்த மின்கம்பம் முறிந்து விழுந்து உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
அன்வர்பாஷா, பாரதிதாசன் நகர், திருச்சி.

அடிப்படை வசதிகள் தேவை 
திருச்சி கோர்ட் வளாகத்தில் இயங்கும் மின்வாரிய அலுவலகம், துணை மின் நிலையம், வணிக வரித்துறை, நுகர்பொருள் வாணிப கழகம், ஊனமுற்றோர் நலத்துறை அலுவலகங்கள் மற்றும் நீதிபதிகள் குடியிருப்பு வளாகத்தில் மழைக்காலங்களில் முழுவதுமாக மழைநீர் தேங்கி நடந்து செல்லக்கூட முடியாத நிலை உள்ளது. இப்பகுதியில் முறையான சாலை, வடிகால் போன்ற அடிப்படை வசதிகள் இன்றி காணப்படுகிறது.  எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து தார் சாலையும், வடிகால் வசதியும் ஏற்படுத்தித்தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 
சத்திய நாராயணன், திருச்சி. 


மேலும் செய்திகள்