தென்காசி மாவட்டத்தில் கோவில்கள் திறப்பு

தென்காசி மாவட்டத்தில் நேற்று அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2021-10-15 19:45 GMT
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் நேற்று அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கட்டுப்பாடு

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து கோவில்களிலும் பக்தர்கள் கூடுவதற்கு தடை விதிக்கப்பட்டது. பின்னர் கோவில்கள் திறக்கப்பட்டன. ஆனாலும் வெள்ளி, சனி, ஞாயிறுக்கிழமைகளில் கோவில்களில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் தமிழக அரசு நிபுணர்கள் குழுவுடன் ஆலோசனை நடத்தி இந்த மூன்று நாட்களிலும் கோவில்களில் தரிசனத்திற்கு பக்தர்களை அனுமதித்துள்ளது.

கோவில்கள் திறப்பு

இந்த உத்தரவைத் தொடர்ந்து தென்காசி மாவட்டத்தில் தென்காசி காசி விசுவநாத சுவாமி கோவில், சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில், பண்பொழி திருமலைக்குமாரசுவாமி கோவில், கடையம் வில்வவனநாத சுவாமி கோவில், சிவசைலம் பரமகல்யாணி கோவில், சிந்தாமணி மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களும் நேற்று பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்டன.

இந்த கோவில்களில் கொரோனா விதிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்