வீடு புகுந்து பெண் மீது தாக்குதல்; வாலிபர் கைது
வீடு புகுந்து பெண்ணை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
நெல்லை:
நெல்லை அருகே உள்ள ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ராஜகோபால் (வயது 27). இவரும், பாளையங்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக 2 பேரும் பிரிந்து விட்டனர்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராஜகோபால் அந்த பெண்ணின் வீட்டிற்குள் புகுந்து அங்கு இருந்த அந்த பெண்ணை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் பாளையங்கோட்டை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜகோபாலை கைது செய்தனர்.