இருசக்கர வாகன பேரணி

விருதுநகரில் இரு சக்கர வாகன பேரணி நடைபெற்றது.

Update: 2021-10-15 19:20 GMT
விருதுநகர், 
தமிழக போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபுவின் வழிகாட்டலின் பேரில் தமிழக சிறப்பு காவல் படையினர், சிறப்பு காவல் படை துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் தலைமையில் நேற்று காலை குமரி முனையில் காந்தி நினைவு மண்டபத்தில் இருந்து தேசிய ஒற்றுமை தின இருசக்கர வாகன பேரணி தொடங்கினர். இதில் 25 சிறப்பு காவல்படையினர் பங்கேற்றுள்ளனர். நேற்று மதியம் விருதுநகர் வருகை தந்த இந்த சிறப்பு காவல் படை பேரணியினரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று அவர்களது முயற்சியை பாராட்டினார். இப்பேரணியினர் பல்வேறு மாநிலங்களை கடந்து அக்டோபர் 31-ந் தேதி குஜராத் மாநிலம் கப்பாடியாவில்உள்ள சர்தார் வல்லபாய் படேல் சிலை முன்பு தேசிய ஒற்றுமை தினத்தன்று தங்களது பேரணியை நிறைவு செய்கின்றனர்.

மேலும் செய்திகள்