திருப்பூர்
திருப்பூர் மாநகர காவல்துறையில் சட்டம்-ஒழுங்கு, குற்றப்பிரிவு, மகளிர், போக்குவரத்து, மத்திய குற்றப்பிரிவு, குற்ற ஆவண காப்பகம் ஆகிய போலீஸ் நிலையங்களில் 3 ஆண்டுகளாக ஒரே போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வந்த இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வரை பட்டியல் தயாரிக்க மாநகர போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டார்.
அதன்படி கடந்த மாதம் இரண்டு கட்டமாக, மாநகர போலீஸ் நிலையங்களில் போலீசார் பட்டியல் தயாரிக்கப்பட்டு அவர்களிடம் இருந்து இடமாறுதல் தொடர்பாக விருப்ப மனு பெறப்பட்டது. பணிமூப்பு அடிப்படையில் போலீஸ் நிலையங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதன்படி 216 பேரை மாநகர போலீஸ் நிலையங்களுக்குள் அதிரடியாக இடமாற்றம் செய்து போலீஸ் கமிஷனர் வனிதா உத்தரவிட்டுள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டுள்ள போலீசார் உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் பணியில் சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.