சேவூர்
சேவூர் அருகே பந்தம்பாளையம் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேகப்படும் படியாக மோட்டார் சைக்கிளில் வந்த வட மாநில இளைஞரை போலீசார் தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர் தடை செய்யப்பட்ட 83 கிலோ புகையிலை பொருள்களை விற்பனைக்காக கடத்தி சென்றது தெரியவந்தது. விசாரணையில் அவர் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த சேட்டன் சிங் வயது 23 என்பதும், அவர் சேவூர் ஏரிமேடு ஸ்ரீராம் தியேட்டர் அருகில் தேவராஜ் என்பவரது தோட்டத்தில் தங்கியிருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து சேவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சேட்டன் சிங்கை கைது செய்தனர். மேலும் இவரிடம் இருந்த ரூ.1லட்சத்தி45 ஆயிரம் மதிப்பிலான 83½ கிலோ புகையிலை பொருள்களையும், மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர்.
---
Image1 File Name : 6732891.jpg
----
Reporter : K. Anandan Location : Tirupur - Cheyur