புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது

புகையிலை பொருட்களுடன் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-10 23:51 GMT
ராமநாதபுரம், 
ராமநாதபுரம் பஜார் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முத்துராமு தலைமையிலான போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ராமநாதபுரம் யானைக்கல் வீதி பகுதியில் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனையிட்டபோது அதில் அரசால் தடைசெய்யப் பட்ட புகையிலை பொருட்கள் விற்பனைக்காக கொண்டு செல்வது தெரிந்தது. இதனை தொடர்ந்து ரூ.10 ஆயிரம் மதிப் பிலான 7 கிலோ புகையிலை பொருட்களையும், ரூ.13 ஆயிரத்து 110 மற்றும் மோட்டார் சைக்கிள், செல்போன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக ராம நாதபுரத்தை அடுத்துள்ள நயினார்கோவில் அருகே உள்ள கொடிக்குளம் பகுதியை சேர்ந்த கார்மேகம் மகன் ராஜேஷ் (வயது34) என்பவரை புகையிலை பொருட்களுடன்  போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்