மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலி

மோட்டார்சைக்கிள் மோதி தொழிலாளி பலியானார்.

Update: 2021-10-10 23:47 GMT
தொண்டி, 
தொண்டி அருகே உள்ள முகில்தகம் ஏசுபுரம் பகுதியை சேர்ந்தவர் ஜேசுராஜ் (வயது58). கூலித்தொழிலாளி.  இவர் சைக்கிளில் கிழக்குக் கடற்கரைச் சாலையில் சென்றபோது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த தொண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி திருவாடானை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்த  புகாரின்பேரில் தொண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்