மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது
மாணவியை கர்ப்பமாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்
திருச்சி
திருச்சி தென்னூர் அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 25). இவர், தனது வீட்டில் சமோசா தயார் செய்து கடைகளுக்கு விற்பனை செய்து வந்தார். இவர், பிளஸ்-2 படிக்கும் மாணவி ஒருவரிடம் நட்பாக பழகினார். நாளடைவில் அவரிடம் நெருக்கம் காட்டியதில் மாணவி கர்ப்பம் அடைந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த மாணவியின் பெற்றோர் இதுகுறித்து கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்திவேதவள்ளி வழக்குப்பதிவு செய்து மோகனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.