78 ஆயிரத்து 396 பேருக்கு கொரோனா தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் 78 ஆயிரத்து 396 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
திருப்பூர்
திருப்பூர் மாவட்டத்தில் 78 ஆயிரத்து 396 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
5-வது கட்ட தடுப்பூசி முகாம்
திருப்பூர் மாவட்டத்தில் தற்போது விடுபட்டுள்ள தகுதியுடைய 18 வயதுக்கு மேற்பட்ட, அனைவருக்கும் முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தும் பொருட்டு நேற்று மாவட்டம் முழுவதும் 5-வது கட்ட சிறப்பு தடுப்பூசி முகாம் நடந்தது.
காலை 7 மணி முதல் மாலை 7 மணி வரை அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதாரநிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், ஊட்டசத்து மையங்கள், பள்ளிக்கூடங்கள், பஞ்சாயத்து அலுவலகங்கள், ரெயில் நிலையங்கள், பஸ் நிலையங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி மருந்து இலவசமாக வழங்கப்பட்டது.
78 ஆயிரத்து 396 பேருக்கு தடுப்பூசி
திருப்பூர் மாவட்டத்தில் 5-வது கட்ட தடுப்பூசி முகாமில் 1 லட்சத்து 39 ஆயிரத்து 640 பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் 78 ஆயிரத்து 396 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இந்நிலையில் மாநகரப் பகுதிகளில் நடந்த தடுப்பூசி முகாம்களை மாநகராட்சி கமிஷனர் கிராந்தி குமார் பாடி ஆய்வு செய்தார். மேலும் பொதுமக்களின் வசதிக்காக பல்வேறு இடங்களில் வீடுகளுக்கு சென்று தடுப்பூசி செலுத்தப்பட்டது.