நல்லம்பள்ளி அருகே மொபட் மீது கார் மோதி 2 பேர் சாவு

நல்லம்பள்ளி அருகே மொபட் மீது கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

Update: 2021-10-10 17:48 GMT
நல்லம்பள்ளி:
நல்லம்பள்ளி அருகே மொபட் மீது கார் மோதி 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.
மொபட் மீது கார் மோதியது
தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அருகே ராமர்கூடல் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 66). அதே ஊரை சேர்ந்தவர் முனியப்பன் (76). இவர்கள் 2 பேரும் நண்பர்கள். சம்பவத்தன்று இவர்கள் 2 பேரும் மொபட்டில் நல்லம்பள்ளிக்கு வந்துவிட்டு, மீண்டும் சொந்த ஊருக்கு சென்றனர்.  அதியமான்கோட்டை அருகே புறவடை தேசிய நெடுஞ்சாலை பிரிவு ரோடு அருகே அவர்கள் வந்த போது அந்த வழியாக வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மொபட் மீது மோதியது. இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயமடைந்த முனியப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். 
 மற்றொருவரும் சாவு
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை போலீசார் விரைந்து வந்து படுகாயமடைந்த மாரியப்பனை மீட்டு சிகிச்சைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த விபத்து குறித்து குறித்து அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்