போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி சாவு

போச்சம்பள்ளி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி விவசாயி இறந்தார்.

Update: 2021-10-10 17:48 GMT
மத்தூர்:
போச்சம்பள்ளி அருகே உள்ள பூதனூர் பகுதியை சேர்ந்தவர் முருகன் (வயது 60). விவசாயி. இவருடைய மனைவி நல்லம்மாள் (56). இவர்களது பேரன் இன்பரசன் (7). இவர்கள் பேரனுடன் மோட்டார் சைக்கிளில் மங்கலபட்டியில் உள்ள மகள் வீட்டிற்கு சென்றனர். போச்சம்பள்ளி நான்கு வழி சாலை அருகே சென்றபோது எதிரே வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் தலையில் பலத்த காயம் அடைந்த முருகனை அக்கம் பக்கத்தினர் மீட்டு போச்சம்பள்ளி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து போச்சம்பள்ளி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்