வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் ஆய்வு

ஆலங்காயம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆய்வு செய்தார்.

Update: 2021-10-10 17:46 GMT
வாணியம்பாடி

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற ஆலங்காயம் ஒன்றிய, ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது. 

இதில் ஆலங்காயம் ஒன்றியத்தில் கிராம ஊராட்சி தலைவர்கள் 27, கிராம வார்டு உறுப்பினர்கள் 237, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் 18, மாவட்ட குழு உறுப்பினர்கள் 2 ஆகிய பதவிகளுக்கு  கடந்த 9-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலின்போது பதிவான வாக்குகளின் பெட்டிகள் ஆலங்காயத்தில் உள்ள அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி கட்டிடத்தில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வாக்குகள் நாளை காலை 8 மணி முதல் எண்ணப்பட உள்ளது. 

அந்த பகுதியில் வாணியம்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்பாண்டியன், இன்ஸ்பெக்டர் நாகராஜ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட கலெக்டர் அமர்குஷ்வாஹா வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

அப்போது வாணியம்பாடி வருவாய் கோட்டாட்சியர் காயத்திரி சுப்பிரமணி, தேர்தல் நடத்தும் அலுவலர் சிவகுமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்