திருப்பத்தூர் மாவட்டத்தில் 21 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் நடந்த முகாமில் 21 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-10-10 17:46 GMT
திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் நேற்று 5-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடந்தது.

208 ஊராட்சிகள், 4 அரசு மருத்துவமனைகள், 37 அரசு ஆரம்பசுகாதார நிலையங்களிலும் மற்றும் வீடு, வீடாகவும் சென்று பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்றது. 

நடமாடும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் குழுக்கள் மூலமாகவும் கிராம செவிலியர், ஊராட்சி செயலர் உள்ளிட்ட மருத்துவ குழுக்கள் வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் தடுப்பூசி செலுத்தி கொள்பவர்களில் 3 பேர் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கலர் டி.வி. பரிசாக வழங்கப்படும் என கலெக்டர் அறிவித்து இருந்தார்.

அதன்படி தடுப்பூசி செலுத்தும் மையங்களில் பொதுமக்கள் ஆர்வமுடன் சென்று தடுப்பூசி போட்டுக்கொண்டனர். மாவட்ட முழுவதும் நடந்த இந்த முகாமில் 21 ஆயிரம் பேர் தடுப்பூசி போட்டு கொண்டனர்.

மேலும் செய்திகள்