தினத்தந்தி புகார் பெட்டி

தினத்தந்தி புகார் பெட்டிக்கு 89396 58888 என்ற ‘வாட்ஸ்-அப்’ எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான பதிவுகளை பார்க்கலாம்.

Update: 2021-10-10 16:27 GMT
திண்டுக்கல் : 

கண்மாயில் மண் அள்ளுவது தடுக்கப்படுமா? 
தேனியை அடுத்த கொடுவிலார்பட்டி புதுக்குளம் கண்மாயில் சிலர் அனுமதியின்றி பொக்லைன் எந்திரம் மூலம் மண் அள்ளுகின்றனர். இதனால் கண்மாய் முழுவதும் பெரிய அளவில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளது. மேலும் கண்மாயின் கரைப்பகுதியும் சேதமடைந்து வருகிறது. எனவே கண்மாயில் மண் அள்ளுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிராஜ், கொடுவிலார்பட்டி.

காட்சிப்பொருளான குடிநீர் தொட்டி 
தேனி அரண்மனைபுதூர் வீரலட்சுமி தெருவில் ரூ.1 லட்சத்து 45 ஆயிரத்தில் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. தொடக்கத்தில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்கிருந்து குடிநீர் எடுத்துச்சென்றனர். அதன் பின்னர் மின்மோட்டார் பழுதால் குடிநீர் வழங்கப்படவில்லை. இதனால் கடந்த பல மாதங்களாக குடிநீர் தொட்டி பயன்பாடு இன்றி காட்சிப்பொருளாக உள்ளது. எனவே குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-காமராஜ், அரண்மனைபுதூர்.
சாக்கடை கால்வாய் ஆக்கிரமிப்பு
பெரியகுளத்தை அடுத்த தாமரைக்குளம் பகுதியில் உள்ள சாக்கடை கால்வாய் பகுதியை சிலர் ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டியுள்ளனர். இதனால் கழிவுநீர் வெளியேற முடியாமல் சாலையில் தேங்குகிறது. எனவே ஆக்கிரமிப்பை அகற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கணேசன், தாமரைக்குளம்.

குப்பைகளால் நோய் பரவும் அபாயம்
தேனி பவர்ஹவுஸ் தெருவில் குப்பை தொட்டிகள் வைக்கப்படவில்லை. இதனால் அங்குள்ள வீடுகளின் பின்புறம் சாலையோரத்தில் குப்பைகளை சிலர் போட்டுச்செல்கின்றனர். இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் நோய்தொற்று பரவும் அபாயமும் உள்ளது. எனவே சாலையோரத்தில் குப்பைகளை கொட்டுவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-நாகதேவி, தேனி.

சாலையில் வீணாக செல்லும் குடிநீர்
தேனியை அடுத்த சுருளிப்பட்டி 2-வது வார்டு நல்லுத்தேவர் தெருவில் உள்ள குடிநீர் தொட்டியில் இருந்து தண்ணீர் வெளியேறும் குழாய் பழுதானதால் குடிநீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சிவாஜி, சின்னமனூர்.

வீடுகள் முன்பு தேங்கும் கழிவுநீர் 
திண்டுக்கல் பி.டபுள்யூ.டி. காலனி ரோஜா தெருவில் கடந்த மாதம் சாக்கடை கால்வாய் அமைக்கப்பட்டது. ஆனால் கழிவுநீர் வெளியேறுவதற்கான வழி ஏற்படுத்தப்படவில்லை. இதனால் கால்வாயில் இருந்து கழிவுநீர் வெளியேறி வீடுகள் முன்பு தேங்கி நிற்கிறது. எனவே கழிவுநீர் வெளியேற்ற சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அல்போன்ஸ், ரோஜா தெரு.

மேலும் செய்திகள்