400 சிறப்பு முகாம்கள் மூலம் ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி

தேனி மாவட்டத்தில் 400 சிறப்பு முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் 42 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

Update: 2021-10-10 15:51 GMT

தேனி:
தமிழகம் முழுவதும் 5-வது மெகா கொரோனா தடுப்பூசி முகாம்கள் நேற்று நடந்தன. அதன்படி தேனி மாவட்டத்தில் 400 இடங்களில் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது. இந்த மெகா தடுப்பூசி முகாம்கள் மூலம் நேற்று ஒரே நாளில் மாவட்டத்தில் 42 ஆயிரத்து 350 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 18 ஆயிரத்து 808 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 23 ஆயிரத்து 542 பேரும் செலுத்திக் கொண்டனர். மாவட்டத்தில் இதுவரை மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 103 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இதில் முதல் தவணை தடுப்பூசியை 6 லட்சத்து 13 ஆயிரத்து 819 பேரும், 2-வது தவணை தடுப்பூசியை 2 லட்சத்து 49 ஆயிரத்து 284 பேரும் செலுத்திக் கொண்டனர். நேற்று தடுப்பூசி முகாம் நடந்த பல்வேறு இடங்களில் மாவட்ட கலெக்டர் முரளிதரன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மேலும் செய்திகள்