கோவில்பட்டியில் தசரா வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம்
கோவில்பட்டியில் தசரா வேடமணிந்த பக்தர்கள் ஊர்வலம் நடத்தினர்
கோவில்பட்டி செல்லப்பாண்டியன் நகர் பகுதியிலுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் வேடமணிந்து 41 நாட்கள் விரதமிருந்து குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா விழாவிற்கு ஆண்டு தோறும் சென்று வருகின்றனர்.
இந்த ஆண்டு வேடமணிந்த பக்தர்கள் நேற்று நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க ஊர்வலமாக சென்றனர். இவர்கள் வருகிற 14ஆம் தேதி (வியாழக்கிழமை) 2 பஸ்களில் குலசேகரப்பட்டினம் சென்று முத்தாரம்மன் கோவிலில் நடக்கும் தசரா நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.