முக்கூடல்:
வடக்கு அரியநாயகிபுரம் வி.எம். காலனியை சேர்ந்த சுசீந்திரன் மகன் நிர்மல் என்ற பாலசுப்பிரமணியன் (வயது 30). அதே ஊரை சேர்ந்த திராவிட மணி என்பவரின் மகன் மகேஷ்குமார் (35). இவர்கள் இருவரும் மோட்டார்சைக்கிளில் முக்கூடலில் உள்ள ஒரு கடைக்கு சென்று விட்டு நெல்லை செல்லும் மெயின் ரோட்டில் வந்தபோது அந்த வழியாக வந்த வாகனம் இவர்கள் மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு சென்று விட்டது. இதில் நிர்மல், மகேஷ்குமார் ஆகிய இருவரும் படுகாயமடைந்து கீழே விழுந்தனர். அந்த வழியாக வந்தவர்கள் 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்சில் பாளையங்கோட்டை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து முக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.