செந்துறை:
அரியலூர் மாவட்டம் செந்துறை பகுதியில் நேற்று முன்தினம் முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் அரியலூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக செந்துறையில் 58 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது. இந்த நிலையில் நேற்று மாலை இடியுடன், மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த காற்றும் வீசியது. இதனால் மாலை 4 மணி முதல் மின்சாரம் தடைபட்டு பொதுமக்கள் அவதிபட்டனர். விட்டுவிட்ட பெய்த பலத்த மழையால் சாலைகள் மற்றும் ஓடைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆங்காங்கே தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் மழைநீர் தேங்கி குளம்போல் காட்சி அளித்தது. மழைநீர் வடிகால் வாய்க்கால்களில் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செந்துறை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.