தென்மாவட்ட ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம்
தென்மாவட்ட ரெயில்கள் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதை இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
மதுரை,
தென்மாவட்டங்களில் இருந்து மதுரை வழியாக நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் ரெயில்கள் இயக்கப்படுகின்றன.
இதற்கிடையே, இந்த ரெயில்கள் ஒரு சில ரெயில் நிலையங்களில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, கடந்த 1-ந் தேதி முதல் தென்மாவட்ட ரெயில் போக்குவரத்து நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, மதுரை-கொல்லம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06723/06724), தாம்பரம்-நாகர்கோவில் (வ.எண்.06191/06192), மதுரை-புனலூர் (வ.எண்.06729/06730), கன்னியாகுமரி-ராமேசுவரம் (வ.எண்.06166), திருச்சி-திருவனந்தபுரம் இன்டர்சிட்டி (வ.எண்.02627/02628), கோவை-நாகர்கோவில் நள்ளிரவு எக்ஸ்பிரஸ், (வ.எண்.02668), கோவை-நாகர்கோவில் பகல் நேர எக்ஸ்பிரஸ், (வ.எண்.06321/06322), மதுரை-திருவனந்தபுரம் அம்ரிதா எக்ஸ்பிரஸ் (வ.எண்.06343/06344), பெங்களூரு-நாகர்கோவில் (வ.எண்.0723207236),
கன்னியாகுமரி-சென்னை (வ.எண்.02633/02634), குருவாயூர்-சென்னை (வ.எண்.06127/06128), சென்னை-கொல்லம் (வ.எண்.06101/06102), நாகர்கோவில்-மும்பை (வ.எண்.06339/06340), கன்னியாகுமரி-நிஜாமுதீன் (வ.எண்.06011/06012), கன்னியாகுமரி-ஹவுரா (வ.எண்.02665/02666) உள்ளிட்ட ரெயில்கள் குறிப்பிட்ட ரெயில் நிலையங்களில் புறப்படும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த நேர மாற்றத்தை உறுதி செய்ய, மத்திய அரசின்https://enquiry.indianrail.gov.in/mntesஎன்ற இணையதளத்தில் சரிபார்த்துக்கொள்ளலாம்.
அத்துடன், ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளம் மற்றும் 139 என்ற தொலைபேசி எண் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.