நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

நாட்டு துப்பாக்கி வைத்திருந்தவர் கைது

Update: 2021-10-09 18:31 GMT
ஆம்பூர்

ஆம்பூரை அடுத்த நாயக்கனேரி மலைக்கிராமத்தில் நேற்று முன்தினம் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் மற்றும் தாலுகா போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்பகுதியைச் ேசர்ந்த ஒருவர் தனது வீட்டில் உரிமமில்லா நாட்டுத்துப்பாக்கியை பதுக்கி வைத்திருப்பதாக தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நாயக்கனேரிைய அடுத்த சீக்கஜூனை பகுதியைச் சேர்ந்த தேவேந்திரன் (வயது 41) வீட்டில் சோதனைச் செய்தனர். வீட்டின் பின்பக்கத்தில் உரிமமில்லா நாட்டுத்துப்பாக்கியை அவர் பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக தேவேந்திரன் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து உரிமமில்லா நாட்டுத் துப்பாக்கியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்