இந்து மக்கள் கட்சியினர் கோவில் நுழைவு போராட்டம்
தூத்துக்குடியில் இந்து மக்கள் கட்சியினர் கோவில் நுழைவு போராட்டம் நடத்தினர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் நேற்று இந்து மக்கள் கட்சி சார்பில் கோவில் நுழைவு போராட்டம் நடந்தது. கோவில்களில் அனைத்து நாட்களிலும் பக்தர்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி வைகுண்டபதி பெருமாள் கோவிலில் நடந்த நுழைவு போராட்டத்திற்கு மாநில இளைஞரணி செயலாளர் செல்வசுந்தர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் வசந்தகுமார் கலந்துகொண்டார். கோவில் நுழைவுவாயிலில் கோஷங்களை எழுப்பியபடி கோவிலின் கதவை திறக்க முயன்றனர்.
இதையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அரசினுடைய விதிமுறைகளை எடுத்துக்கூறி திருப்பி அனுப்பினர். இதில் வீரமுருகன், ராமசுப்பு, சுந்தர், சுடலைமணி, மணிகண்டன், பால்முருகன், செந்தில் உள்பட இந்து மக்கள் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.