கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை நீட்டிப்பு
கோவை குற்றால அருவிக்கு செல்ல தடை நீட்டிப்பு
கோவை
கொரோனா காரணமாக கோவை அருகே உள்ள கோவை குற்றாலம் மூடப் பட்டு இருந்தது.
தொற்று குறைந்ததால் அரசு வழிகாட்டுதலின் படி நீண்ட இடைவெளிக்கு பிறகு கடந்த மாதம் 6-ந் தேதி முதல் சுற்றுலா மையங்கள் திறக்கப்பட்டன.
கோவை குற்றாலம் அருவியில் சுற்றுலா பயணிகள் நீராடி மகிழ்ந்தனர். தற்போது கோவை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.
இதனால் கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து அதிகமானதால் கடந்த 5-ந் தேதி முதல் சுற்றுலா பயணிகள் வர மீண்டும் தடை விதிக்கப்பட்டது.
நீர்வரத்து குறைந்ததால் நேற்று முதல் கோவை குற்றாலத்துக்கு பயணிகள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.
ஆனால் திடீரென்று மழை காரணமாக கோவை குற்றால அருவிக்கு நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. இதனால் கோவை குற்றாலத்துக்கு சுற்றுலா பயணிகளை செல்ல தடை விதிக்கப்பட்டது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை குற்றாலத் துக்கு நீர் வரத்து அதிகமாக உள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க இயலாத நிலை உள்ளது.
எனவே பாதுகாப்பு கருதி அங்கு சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை தொடர்ந்து தடை நீட்டிக்கப்படுகிறது என்றனர்.