போக்சோவில் முதியவர் கைது

10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-10-09 12:19 GMT
குஜிலியம்பாறை:
குஜிலியம்பாறை அருகே உள்ள சாலம்பட்டியை சேர்ந்தவர் ராஜலிங்கம் (வயது 70). கூலித்தொழிலாளி. இவர், ஆடு மேய்க்க சென்ற 10 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமி, தனது பெற்றோரிடம் தெரிவித்தார். 

இதனையடுத்து, குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது.  அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜலிங்கத்தை கைது செய்தனர்.  

இதேபோல் குஜிலியம்பாறை அருகே உள்ள சேர்வைகாரன்பட்டியை சேர்ந்த டிப்ளமோ பட்டதாரியான பிரகாஷ் (31) என்பவர், வீட்டில் தனியாக இருந்த 13 வயதான 8-ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. 
இதுதொடர்பாக சிறுமியின் பெற்றோர்,  குஜிலியம்பாறை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து பிரகாசை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்