கோவில்களை திறக்க கோரி ஆர்ப்பாட்டம்: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது வழக்கு

கோவில்களை திறக்க கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட 600 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

Update: 2021-10-09 01:25 GMT
பெரம்பூர்,

தமிழகத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வார இறுதி நாட்களான வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை நாட்களில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் தரிசனத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அனைத்து நாட்களிலும் கோவில்கள் திறக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பா.ஜ.க.சார்பில் சென்னை மண்ணடி தம்புச்செட்டி காளிகாம்பாள் கோவில் அருகே நேற்று முன்தினம் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த ஆர்ப்பாட்டத்தின்போது பா.ஜ.க. நிர்வாகிகள் கொரோனா காலகட்டத்தில் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், பெரும்பாலானோர் முக கவசம் அணியாமலும், பொதுமக்களுக்கு இடையூறாக அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் செய்ததாக உள்ளிட்ட பிரிவின் கீழ் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் மாநில இளைஞரணி தலைவர் வினோத் பி.செல்வம் மற்றும் பெண்கள் உட்பட 600-க்கும் மேற்பட்டோர் மீது வடக்கு கடற்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும் செய்திகள்