தென்காசி மாவட்டத்தில் நாளை கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாம்
தென்காசி:
தென்காசி மாவட்ட கலெக்டர் கோபால சுந்தரராஜ் நேற்று மாலை நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழக அரசின் உத்தரவின்படி நாளை தென்காசி மாவட்டத்தில் 5-வது சிறப்பு கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் கிராம பஞ்சாயத்து பகுதிகளில் 342 இடங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 114 இடங்களிலும், நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 142 இடங்களிலும் மொத்தம் 598 மையங்கள் மற்றும் அரசு ஆஸ்பத்திரி, ஆரம்ப சுகாதார நிலையங்களில் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.
கோவிஷீல்டு 60,430 மற்றும் கோவேக்ஸின் 7,190 இரண்டும் சேர்த்து மொத்தம் 67,620 டோஸ்கள் கையிருப்பில் உள்ளது. தென்காசி மாவட்டத்தில் 18 வயதிற்கு மேற்பட்டவர்களில் 57 சதவீதம் பேர் முதலாவது தவணையாகவும், மற்றும் 14 சதவீதத்தினர் இரண்டாவது தவணையாகவும் கொரோனா தடுப்பூசி செலுத்தியுள்ளனர். நாளை காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை அருகாமையில் நடைபெறும் முகாம்களில் சென்று தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.