தலைவாசல் அருகே 40 டன் கற்கள் கடத்தல்; லாரி பறிமுதல்-2 பேர் கைது

தலைவாசல் அருகே 40 டன் கற்களை லாரியில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். லாரி கற்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2021-10-08 21:28 GMT
தலைவாசல்:
தலைவாசல் அருகே 40 டன் கற்களை லாரியில் கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர். லாரி கற்களுடன் பறிமுதல் செய்யப்பட்டது.
கற்கள் கடத்தல்
தலைவாசல் அருகே ஆறகளூர் பிரிவு ரோட்டில் தலைவாசல் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ், ஏட்டு முருகேசன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர். 
அப்போது அந்த வழியாக வந்த லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அங்கு பெரம்பலூரில் இருந்து 40 டன் கற்களை கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து கற்களுடன் லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 
2 பேர் கைது
இது குறித்து சேலம் மாவட்ட கனிமவளத்துறை அதிகாரி பிரியா, தலைவாசல் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் லாரியில் கற்களை கடத்தி வந்த சேலம் மாவட்டம் ஆத்தூர் அடுத்த கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த சுந்தர் (வயது 29), ஆத்தூர் லட்சுமண சமுத்திரம் பகுதியை சேர்ந்த சக்திவேல் (49) ஆகிய 2 பேர் மீது தலைவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
மேலும் லாரி உரிமையாளரான ஆத்தூர் நரசிங்கபுரத்தை சேர்ந்த சரவணன் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்