லாரி மீது கார் மோதி ஒருவர் பலி

லாரி மீது கார் மோதி ஒருவர் பலியானார

Update: 2021-10-08 20:20 GMT
துவரங்குறிச்சி
தவ்ஹீத் ஜமாத் மதுரை மாவட்ட துணை செயலாளர் காமில் பாட்ஷா(வயது 51) மற்றும் நிர்வாகிகள் அம்ஜத்கான் (37) உள்பட 8 பேர் பெரம்பலூர் மாவட்டம் லெப்பைக்குடிக்காட்டில் உள்ள தர்காவிற்கு நேற்று ஒரு காரில் சென்று கொண்டிருந்தனர். காரை முகமதுஉமர் (34) என்பவர் ஓட்டினார். திருச்சி மாவட்டம், துவரங்குறிச்சி அருகே உள்ள செவந்தாம்பட்டி விளக்கு என்ற இடத்தில் மதுரை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்றபோது முன்னால் சென்று கொண்டிருந்த டிப்பர் லாரியின் பின்புறம் மோதியது
 இதில், காரின் முன்புறம் நசுங்கியதில் காமில் பாட்ஷா, முகமதுஉமர் (34), ஜாகீர் உசேன்(49), சையது அம்ஜத்கான்(37), சுல்தான் (29), மன்சூர் அகமது (40), ஜெயினுலாப்தீன் (34), சாகுல்அமீது (42) ஆகிய 8 பேரும் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த துவரங்குறிச்சி தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்குச் விரைந்து சென்றுஇடிபாடுகளில் சிக்கிக் கொண்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்புத்துறையின் வாகனத்தின் மூலம் துவரங்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் காமில்பாட்ஷா உயிரிழந்தார். மற்ற 7 பேரும் திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து துவரங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்