மது விற்ற 12 பேர் கைது

மது விற்ற 12 பேர் கைது செய்யப்பட்டனர்

Update: 2021-10-08 20:11 GMT
முசிறி 
சப்-இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையில் போலீசார் முசிறி, தண்டலைபுத்தூர், தும்பலம், சொரியம்பட்டி, அய்யம்பாளையம், சேந்தமாங்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அரசு டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்றதாக உமையாள்புரம் குமார் (39), தண்டலைப்புத்தூர் மும்மூர்த்தி(46), தும்பலம் நடேசன் (50), சின்னதுரை (39), சொரியம்பட்டி பெரியசாமி (73), அய்யம்பாளையம் பாலசுப்ரமணியன் (40), கலியமூர்த்தி (63), ராமலிங்கம் (45), சேந்தமாங்குடி இதயதுகனி (42), தண்டலைபுத்தூர் பாஸ்கர் (50), பனந்தோப்பு மகேஸ் (40) ஆகிய 11 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் 50 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. துவரங்குறிச்சி பஸ் நிலையம் அருகே போலீசார் ரோந்து சென்ற போது மதுவிற்றதாக அதிகாரம் பகுதியைச் சேர்ந்த முருகன் (36) கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்