சிறப்பு கிராமசபை கூட்டம்

அல்லாளப்பேரி ஊராட்சியில் சிறப்பு கிராம சபை கூட்டம் நடைபெற்றது.

Update: 2021-10-08 19:50 GMT
காரியாபட்டி,
 காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், அல்லாளப்பேரி ஊராட்சியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 2019- 2020-ம் ஆண்டு செயல்பாடு குறித்த சமூக தணிக்கை 5 நாட்களாக நடைபெற்றது. இதில் ஆவண சரிபார்ப்பு, மக்களை நேரில் சந்தித்தல், கள ஆய்வு என நடைபெற்ற சமூக தணிக்கை செயல்பாட்டின் அறிக்கையானது நேற்று அல்லாளப்பேரி கிராமத்தில் சிறப்பு கிராம சபையில் பொருளாக வைக்கப்பட்டது. கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் பிரபா, சிவக்குமார் கூறுகையில் கழிவறை வாய்க்கால், நீர் வடிகால் சேகரிப்பு பணி முன்மாதிரியான இடத்தை பெற்றுள்ளது. தங்களது ஊராட்சிக்கு மாவட்ட கலெக்டர் பசுமை வீடுகள் திட்டம் வழங்கும் பட்சத்தில் ஊராட்சியை பசுமையாக உருவாக்குவேன் என்றும் கூறினார். மேலும் மாவட்ட கலெக்டரின் உத்தரவுப்படி கொரோனா நோய் தடுப்பு முறைகளை பின்பற்றி கிராமசபை கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் அம்பிகா, சமூக தணிக்கை மாவட்ட அலுவலர் மணி, வட்டார வள அலுவலர் ஜெகதீஸ்வரன், ஊராட்சி செயலர் லதா மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்