கவுண்டன்ய மகாநதியில் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடும் சிறுவர்கள்

கவுண்டன்ய மகாநதியில் ஆபத்தை உணராமல் குளித்து விளையாடும் சிறுவர்கள்

Update: 2021-10-08 18:27 GMT
குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த மோர்தானா அணை நிரம்பி வலது மற்றும் இடதுபுற கால்வாய்களிலும், கவுண்டன்ய மகாநதி ஆற்றிலும் செல்கிறது. 

குடியாத்தம் நகரின் நடுவே செல்லும் கவுண்டன்ய மகாநதி ஆற்றில் தண்ணீர் செல்வதால் போடி பேட்டை பகுதியில் உள்ள செக்டேம் அருகே ஆபத்தை உணராமல் சிறுவர்கள், இளைஞர்கள் அதில் நீச்சல் அடித்து விளையாடி வருகின்றனர். கடந்த ஆண்டு இதே பகுதியில் தாய் இரண்டு மகள்கள் இறந்த சம்பவம் நடைபெற்றது. ஆனாலும் ஆபத்தை உணராமல் அப்பகுதி சிறுவர்களும் இளைஞர்களும் தண்ணீரில் குளித்து விளையாடி வருகின்றனர். 

கலெக்டர் குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் ஆகியோர் நீர்நிலைகள் மற்றும் ஆற்றுப்பகுதிகளுக்கு யாரும் குளிக்கவோ, விளையாடவோ செல்லக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்