கரூரில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு

கரூரில் ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4 பவுன் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2021-10-08 18:26 GMT
கரூர்
தாலிச்சங்கிலி பறிப்பு
கரூர் பாரதி நகரை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி காந்திமதி (வயது 46). இவர் சம்பவத்தன்று சுக்காலியூர் பாலம் அருகே ஸ்ட்டரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து கொண்டிருந்தனர்.
 அப்போது மோட்டார் சைக்கிளில் கண் இமைக்கும் நேரத்தில் வந்த மர்மநபர்கள் காந்திமதி கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தாலிச்சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த காந்திமதி திருடன்... திருடன்... என சத்தம் போட்டார். 
வலைவீச்சு
அதற்குள் மர்மநபர்கள் தாலிச்சங்கிலியுடன் தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து காந்திமதி தாந்தோணிமலை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசங்கரி வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் தாலிச்சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.

மேலும் செய்திகள்