தூத்துக்குடியில் பிரபல ரவுடி கைது
தூத்துக்குடியில் பிரபல ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி:
தூத்துக்குடி தாளமுத்துநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, டி.சவேரியார்புரம் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் அருகே ஒருவரை வழிமறித்து கொலை முயற்சியில் ஈடுபட்டதாக, பிரபல ரவுடி தூத்துக்குடி மேல அலங்காரதட்டு பகுதியை சேர்ந்த முத்துராஜ் மகன் ரிஷி கபூர் என்ற முத்து ரிஷி கபூர் (வயது 25) என்பவரை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட ரிஷி கபூர் மீது 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.