தொழிலாளி திடீர் சாவு

தொழிலாளி திடீர் சாவு

Update: 2021-10-07 21:32 GMT
நெல்லை :
நெல்லை சந்திப்பு கைலாசபுரம் தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் நேற்று முதியவர் ஒருவர் பிணமாக கிடப்பதாக நெல்லை சந்திப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஷோபா ஜென்சி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை பார்வையிட்டனர். பின்னர் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பிணமாக கிடந்தவர் பாளையங்கோட்டை அருகே உள்ள சீவலப்பேரியை அடுத்த சிங்கத்தான்குறிச்சியை சேர்ந்த வேலு (வயது 66) என்பதும், வாத்து மேய்க்கும் தொழிலாளியான இவர் மயங்கி விழுந்து திடீரென இறந்து கிடந்ததும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்