பட்டாசு- தீப்பெட்டி ஆலைகளுக்கு நாளை விடுமுறை

சிவகாசி, வெம்பக்கோட்டையில் பட்டாசு- தீப்பெட்டி ஆலைகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2021-10-07 20:34 GMT
விருதுநகர், 
சாத்தூர் மற்றும் வெம்பக்கோட்டை தாலுகாவில் நாளை (சனிக்கிழமை) ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுகிறது. இதையொட்டி 2 தாலுகாக்களிலும் செயல்பட்டு வரும் தீப்பெட்டி, பட்டாசு ஆலையில் பணியாற்றி வரும் தொழிலாளர்கள் அனைவருக்கும் வாக்களிப்பதை உறுதி செய்யும் விதமாக மேற்படி 2 தாலுகாக்களிலும் செயல்பட்டு வரும் அனைத்து தீப்பெட்டி மற்றும் பட்டாசுஆலைகளுக்கு வாக்குப்பதிவு நாளான நாளை ஒருநாள் மட்டும் விடுமுறை தினமாக மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டரால் அறிவிக்கப்படுகிறது. மேற்படி அறிவிப்பை மீறி சாத்தூர், வெம்பக்கோட்டை தாலுகாக்களில் தீப்பெட்டி மற்றும் பட்டாசு ஆலைகள் செயல்படுவது கண்டறியப்பட்டால் அந்த பட்டாசு மற்றும் தீப்பெட்டி ஆலைகளின் உரிமம் நிரந்தரமாக ரத்து செய்யப்படுவது மட்டுமின்றி அத்தகைய தொழிற்சாலை உரிமையாளர்கள் மற்றும் குத்தகைதாரர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்