பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம்
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய பெருமாள் கோவிலில் பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பெரிய பெருமாள் கோவில்
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் அமைந்துள்ள வடபத்ர சயனர் என அழைக்கப்படும் பெரிய பெருமாள் கோவில் உள்ளது.
ஆண்டுதோறும் நவராத்திரியையொட்டி 9 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதேபோல இந்த ஆண்டு நேற்று காலை 10 மணிக்கு பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இந்த விழாவில் பெரிய பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியுடன் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
கருட சேவை நிகழ்ச்சி
தினமும் பிரம்மோற்சவ விழாவில் உற்சவம் கோவிலுக்குள் நடைபெறுகிறது.
வருகிற 11-ந் தேதியன்று கருட சேவை நிகழ்ச்சி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், கோவில் நிர்வாக அதிகாரி இளங்கோவன் ஆகியோர் செய்து வருகின்றனர்.