10-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலை நிறுத்தம்

தஞ்சை மாவட்டத்தில் 10-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேைலயிழந்துள்ளனர்.

Update: 2021-10-07 20:21 GMT
சேதுபாவாசத்திரம்:
தஞ்சை மாவட்டத்தில் 10-வது நாளாக விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேைலயிழந்துள்ளனர். 
புரிந்துணர்வு ஒப்பந்தம் 
விசைப்படகு- நாட்டுப்படகு மீனவர்கள் இடையே உள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மீறி நாட்டுப்படகு மீனவர்கள் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் விசைப்படகு மீனவர்கள்  தொழில் செய்யும் போது நாட்டுப்படகு மீனவர்கள் வலைகளில் சிக்கி விசைப்படகுகள் பாதிப்புக்குள்ளாகி நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதுதொடர்பாக மீன்வளத்துறை அதிகாரிகள் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கூட்டங்களில் பலமுறை எடுத்து கூறியும் எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை நடைமுறைபடுத்த வேண்டும்.  நாகப்பட்டினம் மாவட்டம் போல் இரண்டு நாள் முதல் ஐந்து நாட்கள் வரை ஆழ்கடல் சென்று தங்குகடல் மீன் பிடிதொழில் செய்ய அனுமதிக்கவேண்டும். 
10 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலையிழப்பு 
டீசல் உற்பத்தி விலைக்கு மீனவர்களுக்கு வழங்க வேண்டும என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 27-ந்தேதி முதல் விசைப்படகு மீனவர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று 10-வது நாளாக வேலை நிறுத்தம் தொடர்ந்தது. இதனால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள்  வேலையிழந்து தவித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்