காங்கேயம், தாராபுரம், வெள்ளகோவிலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

காங்கேயம், தாராபுரம், வெள்ளகோவிலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2021-10-07 18:32 GMT
காங்கேயம்
காங்கேயம், தாராபுரம், வெள்ளகோவிலில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஆர்ப்பாட்டம்
 காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தின் முன்பு  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் காங்கேயம் வட்டார கிளை செயலாளர் துரைசாமி தலைமை தாங்கினார்.
இதில் வாரம் முழுவதும் விடுமுறை இல்லாமல் பணி செய்வதால் அரசு ஊழியர்கள் அவதிப்படுவதாகவும், வாரத்தில் ஒரு நாளாவது விடுப்பு அனுமதிக்க கோரியும், வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமை பணிபுரியும் நடவடிக்கையை கைவிட கோரியும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதே போல் வெள்ளகோவிலில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை, அங்கன்வாடி, பொது சுகாதாரத் துறையினர் கலந்துகொண்டனர்.
தாராபுரம்
 இதே போல் தாராபுரம் வட்ட கிளை சார்பாக நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்ட பொருளாளர் ராஜூ தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ஈஸ்வரமூர்த்தி கோரிக்கை விளக்க உரையாற்றினார். தாயம்பாளையம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஜோசப் சகாயராஜ், மூலனூர் கிராம சுகாதார செவிலியர் சவுடேஸ்வரி, கிராம சுகாதார செவிலியர் சங்கத்தின் மாவட்ட நிர்வாகி தமயந்தி, சுகாதார ஆய்வாளர் பிரபு வட்ட கிளை நிர்வாகி பால ராஜசேகர் உள்பட பலர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்